INAUGURATION OF SCIENCE CLUB 2023

The Inauguration of Science Club was organized at Sri Ramakrishna Institute of Technology, Coimbatore on 6th December 2023 at 02:30 pm. The Chief Guest Dr. Shariman Bin Abu Bakar, Professor, Mechatronics Engineering, Head Motorsport Technology Research, Universiti Malaysia Perlis, Malaysia released the SRIT Science Club Magazine – 2023 and delivered a Lecture on “Electric Vehicles”. He elaborated the concepts of Electric Vehicles and said that they have gained recognition and importance as it has a huge impact on various industries. The event commenced with welcoming remarks from the Coordinator of Science Club and HOD of S & H Dr.V.Chitra. The Principal Dr.M.Paulraj delivered an inspiring Presidential Address. Students from various disciplines shared their enthusiasm for science and discussed potential collaborative ideas.

பத்திரிக்கை குறிப்பு

அறிவியல் மன்ற துவக்க விழா

     வணக்கம்! கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 2023-2024 ம் கல்வியாண்டின் அறிவியல் மன்ற துவக்க விழாவானது அறிவியல் மற்றும் மனித நேயத்துறை சார்பாகக் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

        இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் ஷரிமான் பின் அபு பக்கர் அவர்கள், அறிவியல் மன்ற இதழ் – 2023 ஐ வெளியிட்டு தனது சிறப்புரையில் கல்லூரி மாணவர்கள் வளர்ந்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டிலும், எதிர்கால ஆராய்ச்சியிலும் எவ்வாறு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

      இந்த விழாவின் சிறப்புரையைக் கல்லூரி முதல்வர் முனைவர் மு. பால்ராஜ் அவர்களும், வரவேற்புரையை அறிவியல் மற்றும் மனித நேயத்துறை தலைவர் முனைவர். வெ. சித்ரா அவர்களும் வழங்கினார்கள். இந்த விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.